Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர சேவை

Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர சேவை-Huawei Offers Superior Services through Its Nationwide Services Centers

நாடு முழுவதிலும் உள்ள Huawei சேவை நிலையங்களிலும் Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதன் மூலம் தனது பாவனையாளர்களுக்கு சிறந்த பங்காளனாக Huawei ஒரு படி மேலே சென்றுள்ளது.

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, தனது  Huawei Y ஸ்மார்ட்போன் வரிசையில் புத்தம் புதிதாக இணைந்து கொண்ட Huawei Y7P ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. 

Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர சேவை-Huawei Offers Superior Services through Its Nationwide Services Centers

உடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்ற Huawei Y7P,  உங்கள் தினசரி ஸ்மார்ட்போன் தேவைகளுக்கு ஏற்றதை விட பொருத்தமானதும், புதுமையானதுமாகும். இது சிறப்பான தோற்றத்தைக் கொண்டதுடன்,  உயர் செயல்திறன் கொண்ட சாதனமாக தொழில் நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Huawei தனது வாடிக்கையாளர்களுக்கு பம்பலபிட்டி, மஹரகம, கண்டி, அனுராதபுர, காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதன் ஆறு வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும் உள்ள உயர் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலம் விவேகமான ஆதரவை வழங்கியுள்ளது.

Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர சேவை-Huawei Offers Superior Services through Its Nationwide Services Centersநவீன கருவிகள், தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் பிற சிறந்த சேவைகளை  அதன் சிறந்த பயிற்சி பெற்ற, ஆதரவான மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் வரையறையற்ற சேவையை வழங்கும் பொருட்டு இலங்கையில் உள்ள Huawei வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் திறமையான உதவிகளை வழங்க Huawei சேவை நிலையம் பாடுபடுகிறது.

Huawei Devices - உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் அண்மையில் Y தொடருக்கு Huawei Y7P என்ற எங்கள் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் சிறந்த மற்றும் மிக உயர்ந்த சேவையை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். Huawei  சேவை  நிலையங்கள் அனைத்து Huawei ஸ்மார்ட்போன்களுக்கும் பல வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதால், அனைத்து Huawei Y7P வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ச்சியான மற்றும் மேம்பட்ட சேவையை வழங்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்ட்டர் மற்றும் முகவர் போன்ற வசதிகள் மற்றும் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அதே நாள் துரித அஞ்சல் சேகரிப்பு' மற்றும் 'ஒரே நாள் பழுதுபார்ப்பு மற்றும் மீளளிப்பு ' கொள்கைகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள இந்த சேவை நிலையங்களுக்கு வருகை தர பரிந்துரைக்கின்றோம்," என்றார்.

Huawei Y7P வாடிக்கையாளர்கள் தற்போது சேகரிப்பு மையங்களிலிருந்து ஒரே நாள் துரித அஞ்சல் சேகரிப்பை தற்போது பெற்றுக்கொள்ள முடியும். ஆரம்பத்தில், Huawei ஊடான துரித அஞ்சல் சேவையானது ஒப்படைக்கப்பட்ட மறுநாளே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. எனினும், புதிய Huawei Y7P  வாடிக்கையாளர்கள் நண்பகல் 3 மணிக்கு முன்னர் தங்கள் துரித அஞ்சல் பொதியை ஒப்படைத்து, சேகரிப்பு மையங்களில் அதேநாளில் மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், HMS சாதன பழுதுபார்க்கும் முகாமைத்துவத்தில் Huawei Y7P வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் ஒரு சிறப்பு முகவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei மொபைல் சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் முகவரை அணுகவும், தடையற்ற மற்றும் எளிதான பாவனையாளர் அனுபவத்திற்கு தெளிவான அறிவுறுத்தல்களை பெறவும் வாய்ப்பளிக்கின்றது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு மையங்களும் துரித அஞ்சல் ஊடாக குறைந்தபட்சம் மூன்று நாள் விநியோக காலத்துடன் வருவதுடன், Huawei Y7P வாடிக்கையாளர்களும் "ஒரே நாள் பழுதுபார்ப்பு மற்றும் மீளளிப்பு" கொள்கையால் பயனடைகிறார்கள், இது அவர்களின் புதிய Y7P சாதனத்தை வசதியாகவும் விரைவாகவும் திருத்திக்கொள்ள அனுமதியளிக்கின்றது. இதற்கு மேலதிகமாக, அங்கீகரிக்கப்பட்ட Huawei சேவை நிலையங்களும், அங்கு வருகை தரும் Huawei Y7P வாடிக்கையாளர்களுக்கென தனியான கவுண்ட்டரையும், விசேட முகவர் ஒருவரையும் கொண்டிருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கவுண்ட்டருக்கு வருகை தந்து அங்குள்ள நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற முகவரிடம் உடனடியாக Y7P சாதனம் தொடர்பான சேவையை  குறைந்த தொந்தரவுடன் பெற்றுக்கொள்ள வழிவகுப்பதுடன், சிறந்த சேவைக்கும் உத்தரவாதம் அளிக்கின்றது.

மூன்று விவேகமான பின்புற கமெராக்களை இது கொண்டுள்ளது. 48MP பிரதான கமெரா, 8 MP அதிவிசாலமான கோண (Ultra Wide Angle) கமெரா மற்றும் 2MP ஆழமான கமெரா ஆகியன இணைந்து அனைத்து விவரங்களையும் துள்ளியமாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதுடன் தொலைவு, விசாலம், மற்றும் தெளிவுடன் படமெடுக்க உதவுகின்றது. இதற்கு மேலதிகமாக, செயற்கை நுண்ணறிவு (AI) அறிவார்ந்த காட்சி அடையாளங்காணும் தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேரத்தில் 500க்கும் மேற்பட்ட காட்சிகளையும், 21 பிரிவுகளையும் தானாக அடையாளம் காணமுடிவதுடன், படங்களை அதற்கேற்ற வகையில் சரிசெய்து மேம்படுத்தலாம்.

மிக நேர்த்தியான துவாரத்துடன் கூடிய 6.39"  அங்குல   முழுக் காட்சி (FullView) திரையைக் கொண்டுள்ளதுடன், பரந்த காட்சியை முழுமையாக அனுபவிக்கும் வகையில் Huawei Y7P ஸ்மார்ட்போனானது 90.15% என்ற திரை-மேற்பாக விகிதத்தைக் (screen-to-body ratio) கொண்டுள்ளது. Huawei நிறுவனத்தின் புதுமையான மறைவு துளை தொழில்நுட்பம் திரையின் அடியில் உள்ள முன் கெமராவை திறம்பட உள்ளடக்குவதுடன், இதன் மூலம் சிறிய துவாரமே தோன்றுவதால் திரையின் முழுமைத்தன்மையும் பாதுகாக்கப்படுகின்றது. மேலும் குறைந்தபட்ச இடையூறுடன் பூரணமான பாவனையாளர் அனுபவத்தையும் வழங்குகின்றது.

மறுசீரமைப்பு, பழுதுபார்ப்பு  மற்றும் புதிய தொழில்நுட்பங்களை நிறுவுவதில் உயர் சேவையை பெற்றுக்கொள்ள, Huawei Y7P இன் பாவனையாளர்கள் இப்போது வசதியாக அமைந்துள்ள ஆறு Huawei சேவை மையங்களில் ஒன்றுக்கு செல்லமுடியும். மேலும், உத்தரவாதகாலம் நிறைவடைந்த சாதனங்களுக்கு உழைப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் சேர்த்தலுக்கான செல்லுபடியாகும் கட்டணங்களுடன் சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

2020 ஆம் ஆண்டில், Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 10 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes Worldஇன் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. 2018 ஆம் ஆண்டு Interbrand இன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.


Add new comment

Or log in with...