கோண்டாவிலில் வாகனத்தை அடித்து நொருக்கிய வாள் வெட்டு குழு | தினகரன்


கோண்டாவிலில் வாகனத்தை அடித்து நொருக்கிய வாள் வெட்டு குழு

கோண்டாவிலில் வாகனத்தை அடித்து நொருக்கிய வாள் வெட்டு குழு-AAVA Group Attacked Van in Kondavil

கோண்டாவில் சந்தியில் தரித்து நின்ற வாகனத்தை, ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (05) இரவு 9 மணியளவில், கோண்டாவில் சந்தியில் உள்ள கடைத்தொகுதிக்கு முன்னாள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவிலில் வாகனத்தை அடித்து நொருக்கிய வாள் வெட்டு குழு-AAVA Group Attacked Van in Kondavil

இதில் குறித்த கடைத்தொகுதியில் பணி புரியும் முகாமையாளரின் வாகனமொன்றே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியாதென வாகன உரிமையாளர் தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை . முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)


Add new comment

Or log in with...