Tech4ALL இலங்கையில் அறிமுகம் செய்யும் Huawei

Tech4ALL இலங்கையில் அறிமுகம் செய்யும் Huawei-Huawei Launches TECH4ALL
Huawei Sri Lanka பிரதி பிரதான நிறைவேற்று அதிகாரி, Huawei Enterprise Business இன் துணைத் தலைவர், இந்திக டி சொய்சா

உலகின் முன்னணி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வு வழங்குனரான Huawei, இணைப்பு, அப்ளிகேஷன்கள் மற்றும் திறன்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தனிநபர்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் டிஜிட்டல் உள்வாங்கலை ஊக்குவிப்பதற்காக தனது புதிய முயற்சியான Tech4ALLஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது.  Tech4ALL என்பது எவ்விடத்திலும் மக்கள் மற்றும் நிறுவனங்களை வலுவூட்டுவதற்கான தொழில்நுட்பம், அப்ளிகேஷன்கள் மற்றும் திறன்களை பயன்படுத்துவதற்கான ஹவாய் நிறுவனத்தின் நீண்டகால, டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியாகும்.

தொழில்நுட்பம் உலகை வேகமாக மாற்றி வருகின்றது. எனினும், எவ்வாறு எல்லா மக்களும், நிறுவனங்களும் இந்த மாற்றத்தினால் நன்மையடைகின்றனர் என உறுதிப்படுத்த முடியும்?, எனவே அனைவருக்கும் டிஜிட்டல் உள்வாங்கலை ஊக்குவிக்க அரசாங்கங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக பங்களார்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்,” என இலங்கைக்கான Huawei Enterprise Business இன் துணைத் தலைவர், இந்திக டி சொய்சா, இந்த முயற்சி தொடர்பில் மேலும் விபரிக்கையில் விளக்கமளித்தார்.

Tech4ALL இலங்கையில் அறிமுகம் செய்யும் Huawei-Huawei Launches TECH4ALL

"நாங்கள் இதை Tech4ALL என்று அழைக்கிறோம், இணைப்பு, அப்ளிகேஷன்கள் மற்றும் திறன்கள் ஆகிய மூன்று முன்னுரிமைகள் மீது இது கவனம் செலுத்துகிறது" என்ற அவர், அவற்றை இணைப்பு அடிப்படையில் சேர்க்கும் போது, Huawei தொடர்ச்சியாக செலவீனம் மற்றும் தொடர்பாடல் எல்லை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் தடைகளை குறைக்கும், மற்றும் அப்ளிகேஷன்களின் அடிப்படையில் Huawei சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும், மேலும் பல்வேறு சமூகங்கள் மற்றும் தொழில்களுக்கு கூடுதல் அப்ளிகேஷன்களை உருவாக்க டெவலப்பர்களுக்கு உதவும். திறன்களைப் பொறுத்தவரை, டிஜிட்டல் திறன்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், தேவையான உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பிற தொழில்துறைகளுடன் Huawei செயல்படும்", எனக் குறிப்பிட்டார்.

TECH4ALL உலகம் வளர, அபிவிருத்தியடைய, உருமாற்றமடைய அனைவருக்கும் நான்கு அடிப்படை உரிமைகள் உண்டு என்று நம்புகின்றது.

கல்வி -  வசதி வாய்ப்புகளற்ற குழந்தைகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கற்றலை மிகவும் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கும் - ஆற்றல் மிகுந்த திறமைசாலிகளுக்கு அடிப்படை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திறன்களை வழங்கும் போதும், ​​சுற்றுச்சூழல் - இயற்கையைப் பாதுகாக்கவும் , நமது கிரகத்தை மிகவும் வினைத்திறன் மிக்க வகையில் பாதுகாக்க உதவும் வழிகளில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்கவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்குமாகும்.

மூன்றாவது சுகாதாரம் - அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு விரைவான மற்றும் எளிதான அணுகலை வழங்குவதற்கு, நோய்களை விரைவாகக் கண்டறிவதையும், அதே நேரத்தில் சுகாதார நிபுணர்களுக்கு மருத்துவ ஆராய்ச்சி ஆதரவை வழங்குவதையும் சாத்தியமாக்கின்றது. இறுதியாக உரிமை அபிவிருத்தி - முயற்சியாண்மையை ஊக்குவிப்பதன் மூலமும், டிஜிட்டல் வளங்களுக்கு சமமான அணுகல் மூலம் வேலைகளை உருவாக்க உதவுவதன் மூலமும் பொருளாதார அபிவிருத்தி இடைவெளிகளை அகற்றுவதற்குமாகும்.

TECH4ALL இன் டிஜிட்டல் உள்வாங்கல் அடிப்படையிலான முன்னுரிமைகள் குறித்து பணியாற்ற Huawei உறுதிபூண்டுள்ளது, இணைப்புகளைப் பொறுத்தவரை, RuralStar போன்ற புதுமையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகள் மூலம் தீவு முழுவதும் கம்பியற்ற தொடர்பை அடைய பங்காளர்களுக்கு Huawei உதவி செய்யும் என Huawei Enterprise Business இன் துணைத் தலைவர், இந்திக டி சொய்சா, தெரிவிக்கின்றார்.

RuralStar தீர்வு என்பது மாற்றம் தொடர்பானதாகும். இந்த தீர்வு பாரம்பரிய கிராமப்புற வலையமைப்பு தீர்வுகளில் நுண்கதிர் அலை அல்லது செயற்கைக்கோள் பரிமாற்றத்தை Relay Remote Node (RRN) wireless backhaul ஆகவும், தொலைத் தொடர்பு கோபுரங்களை எளிய கம்பங்களாகவும் மாற்றுகிறது. மேலும் டீசல் மின் பிறப்பாக்கிகளை சுத்தமான, பச்சை சூரிய சக்தியாக மாற்றுவதுடன், செலவீனத்தை 50% க்கும் அதிகமாக குறைக்கின்றது.

பயன்பாடுகளைப் பொறுத்தவரை, இலங்கையில் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் ஸ்மார்ட் கல்வி முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் Huawei செயல்படும். “மேலும் திறன்களைப் பொறுத்தவரை, Huawei விரைவில் மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் ஒரு கூட்டு புதுமை ஆய்வகத்தைத் திறப்பதுடன், பங்காளர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் எதிர்கால திட்டத்திற்கான விதைகளுக்கு மேலதிகமாக, 2016 ஆம் ஆண்டில் Huawei இனால் தொடங்கப்பட்டு, இதுவரை நான்கு ஆண்டுகளாக தொடர்வதுடன், இந்த முயற்சியின் மூலம் இலங்கையின் எதிர்கால தலைமுறையினருக்கு தொழில்நுட்ப பரிமாற்றத்தை கொண்டு வருவதற்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம்”, என்று இந்திக டி சொய்சா மேலும் தெரிவித்தார்.

TECH4ALL என்பது அனைத்து பிரிவுகளுக்கும் தொழில்நுட்பத்தை நெருக்கமாகவும், அணுகக்கூடியதாகவும் உறுதி செய்யும் ஒரு முயற்சி. TECH4ALL முயற்சியுடன் முழு சமூகத்தின் டிஜிட்டல் திறன்களை வளர்ப்பதற்கு உள்ளூர் அரசாங்கங்கள், சமூகங்கள் மற்றும் பிற துறைகளுடன் Huawei செயல்படும். இந்த முயற்சி உலகெங்கிலும் உள்ள 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலிருந்து நேரடியாக பயனடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகம் தொடர்ச்சியாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் வழிநடத்தப்படுகின்றது, மேலும் யாரும் தனித்து விடப்படக்கூடாது என Huawei நம்புகிறது. TECH4ALL, அளவிடக்கூடிய முடிவுகளுடன் டிஜிட்டல் உள்வாங்கல் மற்றும் வலுவூட்டல் முயற்சிகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டது. அதன் பல்வேறு நோக்கங்களில் ஒன்று ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை துரிதப்படுத்த உதவுவதாகும். GSMA தரவுகளின் படி, 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மொபைல் பிரோட்பேண்ட் சேவைகளைப் பெறவில்லை. மேலும் 3.8 பில்லியன் மக்கள் இன்னும் தொடர்பில்லாத நிலையில் உள்ளனர். இது உலக மக்கள் தொகையில் பாதியாகும். இதன் பொருள் இணைப்பு இன்னும் டிஜிட்டல் உள்வாங்கலின் அடிப்படையாகும். மேலும் புத்தாக்கம் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப Huawei கடுமையாக உழைத்து வருகிறது. தொழில்நுட்பம் சிறந்தது என்று Huawei நம்புகிறது. மேலும் இது நன்மைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் முழு டிஜிட்டல் உள்வாங்கலையும் ஊக்குவிக்க, அவர்கள் TECH4ALLஐ ஒரு செயல்திட்டமாக ஒன்றிணைத்துள்ளனர்.


Add new comment

Or log in with...