Hutch வலையமைப்பு விரிவாக்கலுடன் 4G சேவை அறிமுகம் | தினகரன்


Hutch வலையமைப்பு விரிவாக்கலுடன் 4G சேவை அறிமுகம்

Hutch தனது நாடளாவிய வலையமைப்பு உள்ளடக்க விரிவாக்கம் மற்றும் 4G சேவை அமுலாக்கத்தின் பூர்த்தி தொடர்பில் நேற்று (25) உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எடிசலாட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (Etisalat) நிறுவனத்தை 2018 ஆம் ஆண்டில் தனது மூலோபாய கையகப்படுத்துதலுக்கு உட்படுத்தி முக்கியமான சாதனையொன்றை நிலைநாட்டியிருந்த Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, தற்போது மேற்குறிப்பிட்ட இரு வலையமைப்புக்களுக்கும் இடையேயான கூட்டிணைப்பு வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

பல கட்டமைப்புகளிலிருந்து வாடிக்கையாளர்களை உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பிற்கு மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

மிகப்பாரிய வலையமைப்பு கூட்டிணைப்பு இப்போது நாடு முழுவதும் 2G, 3G, 4G சேவைகளின் விசாலமான மற்றும் சிறந்த வலையமைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இது இடமளிக்கும் என உலகளாவில் மாபெரும் தொலைதொடர்பு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற CK Hutchison Holdings இன் உள்நாட்டு துணை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அத்துடன், நிறுவனம் தனது புதிய வெளித்தோற்றம் மற்றும் வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றமான “Be. Anywhere” என்பதையும் வெளியிட்டுள்ளதுடன், இலங்கையில் தனது 4G வலையமைப்பு உள்ளடக்கத்தை பூர்த்தி செய்துள்ளமையைக் கொண்டாடும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.

இவ் வலையமைப்பு மேம்பாடு அனைத்து 25 மாவட்டங்களிலும் சனத்தொகையில் 95% இனை உள்ளடக்குவதுடன், அதே சமயம் 12,000 இற்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு சேவைகளை வழங்குகின்றது.

3,500 இற்கும் மேற்பட்ட தளங்கள் கூட்டிணைக்கப்பட்ட நிலையில், 4G வலையமைப்பு விரிவாக்கம் என்பது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தது.

இலங்கையைச் சேர்ந்த மொத்தமாக  400 இற்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிப் பணியாளர்கள் மற்றும் ஏனைய பல நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஒன்றுசேர்ந்து இச் செயற்திட்டத்தை 12 மாத காலத்திற்குள் பூர்த்தி செய்து சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

தனது தீவிரமான விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மேம்பட்ட வலையமைப்பினை ஏற்படுத்தியுள்ளமைக்கு மேலாக, குரல், தரவு மற்றும் பிற சேவைகளில் மிகவும் சிக்கனமான கட்டணங்களில் ஒரு விரிவான உற்பத்தி வரிசையை செயல்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

இந்த சாதனை குறித்து HUTCH இன் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. திருக்குமார் நடராசா அவர்கள் ஆர்வமேலீட்டுடன் கருத்து வெளியிடுகையில், “இரு வலையமைப்புகளையும் 100% வெற்றிகரமாக கூட்டிணைத்துள்ளதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

கடந்த ஆண்டில் சவால்மிக்க மற்றும் கொந்தளிப்பான தொழிற்பாட்டு சூழல் இருந்தபோதிலும், திட்டமிடப்பட்ட காலக்கெடுவிற்குள் இந்த மகத்தான முயற்சியை நிலைநாட்டியுள்ளமைக்காக எங்கள் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிகளின் சாதனையையிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம்.
நாடு முழுவதும் 4G வலையமைப்பு உள்ளடக்கம் முடிவடைந்துள்ள நிலையில், HUTCH தற்போது தொழில்துறையில் முன்னணி ஸ்தானத்தை எட்டியுள்ளதுடன், இலங்கை சந்தையின் அனைத்து பிரிவுகளுக்கும் சேவை செய்ய வெண்டும் எங்கள் அர்ப்பணிப்புடனான உறுதிப்பாட்டிற்கு சான்றாக மாறியுள்ளது. இலங்கையில் உள்ள மக்களுக்கு நவீன மொபைல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை நாங்கள் தொடர்ந்தும் அறிமுகப்படுத்துவதுடன், இதன் மூலம் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் வாழ்க்கையை வாழ்வதற்கும் கனவுகளை வெல்வதற்கும் எளிதாக்க முடிகின்றது!” என்று குறிப்பிட்டார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னால், Hutch தனது மூலோபாய முதலீட்டின் ஒரு பகுதியாக நாட்டில் மிகவும் மேம்பட்ட switch மற்றும் core வலையமைப்பினை நிறுவுவதையும் பூர்த்தி செய்துள்ளது.

மேலும், இந்நிறுவனம் உலகின் மிக முற்போக்கான Converged Billing Systems (CvBS) இனையும் நடைமுறைப்படுத்தியுள்ளது, இங்கு பிற்கொடுப்பனவுத் திட்டம் மற்றும் முற்கொடுப்பனவுத் திட்டம் தொடர்பான கட்டணப் பட்டியல் அமைப்புகள் ஒரே கலப்பு தளமேடையில் தொழிற்படும் வகையில் பல வகையான உற்பத்திகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர் வசதிக்கு ஏற்ப வழங்கவும் வழிகோலும்.

இலங்கையில் தனது சேவைகளை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் நிறுவனத்தின் முதலீட்டின் ஒரு பகுதியாக Hutch சந்தாதாரர்கள் இன்னும் பல அற்புதமான தொழில்நுட்ப அறிமுகங்கள் மற்றும் டிஜிட்டல் துணை கொண்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளை எதிர்பார்க்கலாம்.

HUTCH 4G வழங்கும் நன்மைகள்
இலங்கை முழுவதும் 4G வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், வாழ்வின் அனைத்து நிலைமட்டங்களையும் சார்ந்த வாடிக்கையாளர்களை டிஜிட்டல் யுகத்தினுள் உள்வாங்குவதற்கும், நாடு முழுவதும் சிக்கனமான கட்டணங்களில் புரோட்பேண்ட் சேவைகளை கொண்டு வருவதற்கும் Hutch தனது முயற்சிகளில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடையப் பெற்றுள்ளது.

மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சிக்கமான கட்டணங்களில் தரவு இணைப்பு போன்று மக்களின் வாழ்க்கையில் கண்கூடான மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய Hutch விரும்புகிறது.

4G  மிகவும் வலுவான அனுபவத்தை வழங்குவதுடன், Hutch வாடிக்கையாளர்களுக்கு வீடியோக்கள், விளையாட்டுகள் மற்றும் உயர் தரமான வீடியோக்களின் பாய்ச்சல் (streaming) போன்ற பெரிய கோப்புகளை மிக விரைவாகவும் சீராகவும் பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கிறது.

தற்போதைய Hutch வாடிக்கையாளர்கள் உடனடியாகவும் மற்றும் இலவசமாகவும் 4G தயார்நிலை கொண்ட SIM இற்கு மேம்படுத்தலாம், அதே நேரத்தில் பழைய இலக்கத்தையே புதிய இலக்கமாக தொடர்ந்தும் கொண்டு புதிய 4G SIM இற்கு மாற்றி, தமது பழைய மொபைல் இலக்கத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

இணையத்தினூடாக விண்ணப்பம் செய்வதன் மூலம் 4G தயார் நிலை கொண்ட SIM ஐப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் SIM மேம்படுத்தல் சேவைகளை வழங்கும் சில்லறை விற்பனை நிலையத்திற்குச் செல்வதன் மூலம் அல்லது 1,788 ஐ அழைப்பதன் மூலம் SIM இனை உங்கள் வீட்டு வாசலிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலும் 3G வலையமைப்பில் கிடைக்கும் அதே சிக்கனமான Hutch Data திட்டங்களையும் புதிய 4G வலையமைப்பிலும் தங்குதடையின்றி பயன்படுத்தலாம்.


Add new comment

Or log in with...