ஆயிரம் போட்டிகளில் விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை | தினகரன்


ஆயிரம் போட்டிகளில் விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

ஸ்பால் அணிக்கெதிராக விளையாடியதன் மூலம் ஆயிரமாவது போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ‘செரி ஏ’ லீக்கில் ஸ்பால் அணிக்கெதிராக களம் இறங்கினார். இந்த போட்டியில் யுவான்டஸ் 2-–1 என வெற்றி பெற்றது.

39-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இந்த போட்டி அவருக்கு ஆயிரமாவது போட்டியாகும். மேலும் இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் செர்ரி ஏ லீக்கில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பருவத்தில் இதுவரை 21 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன் கடந்த சீசனில் குவாகிலியேரெல்லா (சம்ப்டோரியா), பாடிஸ்டுடா (பியோரென்டினா கிளப் 1994- – 95) ஆகியோர் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் கோல் அடித்துள்ளனர்.


Add new comment

Or log in with...