டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்- ஜப்பான் | தினகரன்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்- ஜப்பான்

திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் மீண்டும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஜப்பான் இது தொடர்பான அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது.

ஜப்பான் அமைச்சரவை செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச ஒலிம்பிக் குழு, டோக்கியோ நகர அரசாங்கம் மற்றும் அமைப்புக்களின் குழுக்களுடன் இது தொடர்பாக ஓன்றிணைந்து செயல்ப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓலிம்பிக் தீபத்தினை எடுத்து செல்லும் நிகழ்வு மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து இது தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...