வெளியுறவு கொள்கையில் புதியதோர் அத்தியாயம்

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற வேலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது. தனது ஆட்சிக் காலத்தில் பின்பற்றவுள்ள வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக அவர் அங்கு ஆங்கிலத்தில் முக்கிய உரையை ஆற்றினார்.

நாம் நமது வெளிநாட்டுக் கொள்கைகளை நடுநிலையாக வைத்திருக்க வேண்டுமென்றும், உலக அதிகாரமிக்கவர்களின் மோதலிலிருந்து விலகி நிற்பதே எமக்குத் தேவையெனவும் ஜனாதிபதி கோட்டாபய அங்கு சுட்டிக்காட்டினார். அதன் கருத்து இலங்கையின் ஐக்கியத்துக்கும் இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு வெளிநாட்டுத் தொடர்பையும் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி மேற்கொள்ளாது என்பதாகும். ஜனாதிபதி அதனை அங்கு கூடியிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது வெளிநாட்டுக் கொள்கையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆங்கிலத்தில் அதனைக் கூறினார்.

அனைத்து நாடுகளோடும் இராஜதந்திர உறவைப் பேண வேண்டிய அவசியத்தை தமது உரையில் அவர் தெரிவித்தாலும் மக்களின் அபிப்பிராயங்களின்படியே அவ்வுறவுகளை பேணவுள்ளதாகவும் குறிப்பிடத் தவறவில்லை.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் இந்த கூற்றும் உணர்த்தலும், நல்லாட்சிக் காலத்தில் வெளிநாட்டு கொள்கைகளை பல வருடங்களாக அனுபவித்த மக்கள் மனதில் புதிய எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் நட்புறவுடனான மற்றும் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றுவதாகக் கூறும் 'சுபிட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் அடங்கியுள்ள விடயங்கள் மக்களின் மனதில் மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகளுக்கிடையே மாறுபட்ட பின்னணியை உடையவராவார். கோட்டாபய ராஜபக்ஷ பல விருதுகளை வென்ற தலைவர் என்பதை மறந்து விடக் கூடாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் அவர் பாதுகாப்பு செயலாளராக அளித்த ஒத்துழைப்பே யுத்தத்தின் வெற்றிக்குக் காரணமாகும். அதன் பின்னர் அவர் நகர அபிவிருத்தி செயலாளர் பதவியை வகித்த வேளையில், மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்நாட்டு மக்கள் மறந்து விடவில்லை.

இவை அனைத்திலும் அவர் உறுதி செய்த விடயமொன்றுள்ளது. அதாவது தனக்கு வழங்கப்பட்ட எந்தக் கடமையானாலும் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றும் திறமை வாய்ந்தவர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய முதலாவது உரை இதனைப் புலப்படுத்துகிறது. இந்த பின்னணியிலிருந்து ஆராயும் போது அனைவருக்கும் தெளிவாக புரியும். அதாவது கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டு வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக நல்ல புரிந்துணர்வோடும் கவனமாகவும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் என்பது புரியும்.

அநேகமானோர் கவனம் செலுத்திய விடயம் இலங்கையின் புதிய ஜனாதிபதி இந்தியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை எவ்வாறு பேணுவார் என்பதாகும். இலங்கையின் பல திட்டங்களுக்கு சீனாவின் உதவி கிடைத்துள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையம், தாமரைத் தடாகம் போன்ற திட்டங்கள் அவற்றில் முக்கியமானவையாகும். இலங்கையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்தியாவும் குறைவில்லாது உதவிகளை வழங்கியுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான வர்த்தக ஒத்துழைப்பு முக்கிய அம்சமாகும். ஆனால் இந்த இரண்டு நாடுகளும் வலயத்தில் அதிகாரமிக்கவர்களாக மாற எடுக்கும் போட்டி என்பவற்றை கருத்தில் கொள்ளும் போது அவ்விரு நாடுகளுடனான உறவு இலங்கைக்கு மிக முக்கியமாகும்.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு சர்தேச தரத்திலான விமர்சகர்கள் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக (கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர்) பல கருத்துகளை தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

ஆய்வாளர் பிரஹ்ம செலானி இந்தியாவில் வெளிவரும் ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு இந்தியா பிராந்திய ரீதியாக பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேபாளம், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாகவும், கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் அதிகாரத்தை பெற்றுள்ளதாலும் அவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரஹ்ம செலானி கூறியுள்ளார். பிரஹ்ம செலாவனியின் கூற்றில் அடங்கியுள்ள ஆழமான விடயம் என்னவென்றால் இந்தியா, அமெரிக்காவின் உபாய வழியிலான இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடையாக இருப்பார் என்பதை தவிர வேறொன்றுமில்லை.

எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உறுதி செய்த பின்னர் முதன் முதலில் வாழ்த்துத் தெரிவித்தவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாவார். டிவிட்டர் செய்தி மூலம் அவர் தெரிவித்திருந்ததாவது: பிராந்தியத்தில் சமாதானத்தையும், சௌபாக்கியத்தையும் போன்று பாதுகாப்புக்கும் கோட்டாபய ராஜபக்ஷவின் நியமனம் முக்கியமானது. அதேபோல் தான் கோட்டாபய ராஜபக்ஷவும் மிக நெருங்கிய தொடர்புகளை பேண எதிர்பார்ப்பதாகவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவும் அவர் தவறவில்லை. தமது பதவியேற்பின் பின்னர் தமது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவை தெரிவு செய்த கோட்டபாய ராஜபக்ஷ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறந்த உறவு குறித்து உலக நாடுகளுக்கு சமிக்ஞையையும் அளிக்கத் தவறவில்லை..

இதேவேளை சீனாவின் இலங்கைத் தூதுவர் சென்ஸ் சியுஆன் தனது குழுவினருடன் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடினார். அதற்கு இணைந்ததாக பெய்ஜிங்கின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஊடகங்களுக்கு இலங்கையுடனான நேர்மையான, அந்நியோன்யமான ஒத்துழைப்பு என்னாளும் நீடிக்குமெனத் தெரிவித்திருந்தார்.

சீனாவுடனான உறவு எத்தகையது என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தின் போது நேரடியாகத் தெரிவித்திருந்தார். இந்தியாவில் வெளிவரும் ‘இந்து’ பத்திரிகைக்கு "சீனாவுடனான உறவு முன்றிலும் வர்த்தக தொடர்புடையது என அவர் தெரிவித்திருந்தார். நாம் இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா போன்ற ஏனைய நாடுகளுக்கு எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுங்கள் என்றே கூற விரும்புகின்றோம். ஏனைய நாடுகளிலுள்ள நிறுவனங்கள் இங்கு வந்து முதலீடு செய்யாவிட்டால் இலங்கைக்கு மாத்திரமல்ல முழு ஆசியாவுக்குமே பாதிப்பு ஏற்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். ஆசிய பிராந்தியம் பற்றிய அவரது நோக்கு அதன் மூலம் தெரிய வருகின்றது.

இந்தியாவின் மனிபால் பல்கலைக்கழக பேராசிரியர் மாதவ் நலபாத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெய்ஜிங்குடனான வர்த்தக தொடர்புகளை பேண முன்வந்தமை நல்ல விடயமாகும் என்கிறார்.

அதேவேளை இந்து பசுபிக் பிரச்சினை தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய தொடர்புகளை உருவாக்க ஜனாதிபதி முன்வர வேண்டுமெனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

எவ்வாறாயினும் இந்தியா, சீனா, அமெரிக்காவுடன் நல்லெண்ணத்தை உருவாக்குவது இலகுவல்ல. ஆனால் அந்த இலக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மெல்ல மெல்ல வெற்றி கொண்டு வருகின்றார். கடந்த மாதத்தில் ஒரே வாரத்தில் சீன வெளிநாட்டமைச்சர் வெஸ்யி, ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சர்ஜி லெவ்ரோப், அமெரிக்கா இராஜாங்க திணைக்கள உதவிச் செயலாளர் எதிஸ். ஜீ. வெல்ஸ் ஆகியோர் தனித்தனியாக கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியமை அதன் ஆரம்பமாகும்.

இந்தியா, சீனா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடனான தொடர்புகளை வலுப்படுத்தி அதன் மூலம் சமுத்திர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவை இலங்கைக்குள்ளது. அது இந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான உதவியாகும். இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றாக அறிந்துள்ளார் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

மஞ்சுளா விஜயரத்ன...


Add new comment

Or log in with...