தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம் | தினகரன்


தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை, நிரப்பும் பொருட்டு அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில் (25) இடம்பெறுகிறது.  

இவர்களுக்காக அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் தெரிவான 282 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படுகிறது.

கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெறும் வைபவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  கடிதங்களைக் கையளிக்கவுள்ளார்.

இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம், இரண்டாம், மூன்றாம் தரங்களைச் சேர்ந்தோரும், இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றைச் சேர்ந்தோருக்குமே அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில்  நியமனங்கள் வழங்க முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் அரசியல் தலையீடுகளால் இம்முயற்சிகள் தடைப்பட்டன.  தற்போது அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றிய நிலையில் சுயாதீனமாக நியமனங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.    

சாய்ந்தமருது குறூப் நிருபர்


Add new comment

Or log in with...