ஈஸ்டர் குண்டு வெடிப்பு; விசாரணைகளின் முன்னேற்றத்தை கண்டறிய குழு நியமனம்

ஈஸ்டர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் முன்னேற்றத்தை கண்டறிவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் சிறப்புச் செயற்குழு ஒன்று நியக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்த சிறப்பு பணிக்குழுவில் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி ஜெகத் அல்விஸ் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவதுடன் இது தொடர்பான அறிக்கை வாரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். (ஸ)   


Add new comment

Or log in with...