ஜனாதிபதி கோட்டாபயவின் 100 நாள் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி கோட்டாபயவின் நூறு நாள் வேலைத் திட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பதவியேற்ற நாளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் வெற்றி கரமாக முன்னெடுக்கப்பட்டு இன்றுடன் (25) நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நூறு நாட்களில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல், உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பை உறுதி செய்தல் என்பவை கல்வியால் முழுமையடைந்த  சமூகத்தை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவையாகும்.

உயர்கல்வி வாய்ப்பைப் பெறாத இளைஞர் யுவதிகளை தொழிற் பயிற்சியும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவுடனும் கூடிய தொழிநுட்பவியலாளர்களாக உருவாக்கும் வேலைத்திட்டங்களும் இந்த நூறு நாள் வேலைத்திட்டங்களில் அடங்குகின்றது.இருபது வயதான பட்டம்பெற்ற இளைஞர், யுவதிகளை தொழிலுக்காக தயார்படுத்தல், வறிய குடும்பங்களிலுள்ள எவ்வித தொழிற் தகைமைகளையும் கொண்டிராத இளைஞர், யுவதிகளுக்காக செயலணியொன்றினை ஸ்தாபித்து ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கல், அவர்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமும் ஜனவரி 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது போன்று தேசிய பாதுகாப்பு, தாதியர் கல்வி, அரச நிறுவனங்களில் தகுதியான அதிகாரிகளை உள்வாங்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த நூறு நாள் திட்டத்தில் அடங்கியுள்ளன. இவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...