கொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்.. | தினகரன்


கொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..

தேவையான பொருட்கள்   
சுரைக்காய் - 1 
மோர் - 1 கோப்பை   
எலுமிச்சை பழம் - 1   
மிளகுத்தூள் - 1/4 தே.க   
உப்பு - சுவைக்கேற்ப  
 
செய்முறை:   
தோலை சீவிய பின்னர் சுரைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.   
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சுரைக்காய் துண்டுகளை அல்லது துருவலை இட்டு லேசாக வதக்கி ஆற வைத்து கொள்ளவும். ( எண்ணெய் ஊற்றக் கூடாது)   
வதக்கிய சுரைக்காயை மிக்ஸியில் இட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.   
வடிகட்டிய சாற்றுடன் மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, ஐஸ்கட்டி ஆகியவற்றைச் சேர்த்து கலந்து பருகலாம்.   
இது உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது.      

Add new comment

Or log in with...