Smart வில்லன்

நடிப்பில் நவரசம் காட்டி ஸ்மார்ட் வில்லன் என பெயர் பெற்று அக்ஷன்  காட்சிகளில் அசத்தும் நடிகர் பிரசன்னா மாபியா படத்தில் கேங்க்ஸ்டார்  கேரக்டரில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அந்த அனுபவங்கள் குறித்து  அவர் மனம் திறந்ததாவது...

'மாபியா' கதையை இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய போது எப்படி இருந்தது?

கதை  கூறிய போது படத்தோட டிசைன் இப்படித்தான் இருக்கும்னு சில ரெபரன்ஸ்  காட்டினார். கதை புதுசா, போதை பொருள் கடத்தும் தலைவன் கேரக்டர் எனக்கு  ஸ்டைலிஷா இருந்தது.

' அருண் விஜய்க்கும் உங்களுக்குமான காட்சி அமைப்பு ?

எனக்கும்  அருண் விஜய்க்கும் காம்பினே ஷன் காட்சிகள் குறைவு. அருண் விஜய்யை வில்லனாக  மக்கள் பார்த்து இருக்காங்க. அவருக்கு வில்லனா நான் நடிக்கும் போது பெரிய  போட்டி இருந்தது.

* மாபியா படத்தில் உங்களுக்கு ஜோடி இருக்காங்களா?

வில்லனுக்கு யாருங்க ஜோடி தராங்க. பிரியா பவானி சங்கர் மாதிரி ஒரு ஹீரோயின் கொடுத்தால் வேணாம்னா சொல்லப் போறேன்.

' வில்லனாக நடிக்க விரும்புவது ஏன்?

'அஞ்சாதே'க்கு  பின் 'முரண்', 'துப்பறிவாளன்', 'திருட்டு பயலே 2', 'மாபியா', தெலுங்கில்  'ஜவான்' மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் ஒரு படம் என வில்லனாக  நடிக்கிறேன். ஹீரோவா நடிக்கும் போது இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற  கட்டுப்பாடு இருக்கும். வில்லனாக நடிக்கும் போது சுதந்திரம் கிடைக்கும்.

' அருண்விஜய் ஒரு 'ஜிம் ​ேபாய்' நீங்க எப்படி ?

அருண்விஜய்யை  முதல்ல பார்த்ததே ஜிம்மில் தான். அவர் அப்பாவுடன் தான் ஜிம்க்கு வருவார்.  நானும் உடற்பயிற்சி மீது ஆர்வம் செலுத்துவதற்கு இவர்கள் ஒரு காரணம்.

' சினேகா நடித்த 'பட்டாசு'

படம் பார்த்தீங்களா ?

ஒரு  கணவரா அவங்கள அந்த கேரக்டரில் பாக்கும் போது பெருமையா இருந்துச்சு. ஒரு  சினிமா ரசிகனாக பார்க்கும் போது அவங்க முயற்சி பாராட்டும்படி இருந்துச்சு.  'பட்டாசு' எனக்கும், குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் திருப்தியான படம்.

'தனுஷ் இயக்கத்தில் நீங்க நடித்தது குறித்து?

அவர்  குறித்து நான் என்னவெல்லாம் நினைச்சுட்டு வந்தேனோ அதை எல்லாம் பிரேக்  பண்ணிட்டே வந்துட்டு இருக்காரு. எவ்வளவு திறமையான நடிகரோ அந்த அளவு  திறமையான இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர். இதை எல்லாம்  சாதாரணமாக செஞ்சிட்டு இருக்காரு.

' தற்போது வரும் புது இயக்குனர்கள் ?

'மாபியா'  கார்த்திக் நரேனுக்கு 2வது படம். இவர் எந்த இயக்குனரிடமும் வேலை  பார்க்கலை, அனுபவமும் இல்லை. ஆனால் ஒரு இயக்குனராக ஜெயிச்சிருக்கார்.  கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு உதாரணமாக சொல்லலாம். புது இயக்குனர்கள்  வரும்போதே அவர்களுக்கான திறமைகளை வளர்த்துட்டு வர்ற மாதிரி தெரியுது.

* விஷால் கூட நடிக்கிற 'துப்பறிவாளன்' குறித்து கூறுங்கள்?

'துப்பறிவாளன்1'ல் நடிச்சதை விட 'துப்பறிவாளன் 2' நடிக்கும் போது ரொம்ப நெருக்கமா ரெண்டு பேரும் ஆகிட்டோம்ணு சொல்லலாம்.

* உங்க திரை அனுபவத்துல 18வருஷத்துல 35படங்கள் ?

எந்தப்  படத்தை பார்த்தாலும் நல்லா பண்ணி இருக்கலாமேனு தோணும். இந்த 18வருஷம்  மேடு பள்ளங்கள் தாண்டி வந்திருக்கேன். என் எதிர்காலம் உறுதியாக இருக்கும்னு  நம்புறேன்.

* உங்களுக்கு படம் இயக்க, தயாரிக்க ஆர்வம் இருக்கா ?

நிறைய கதை மனசுல ஓடிகிட்டே இருக்கு. படம் தயாரிப்பதில் ஆர்வம் இருக்கு. கண்டிப்பா விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.

* சினேகாவும் நீங்களும் 'அச்சமுண்டு அச்சமுண்டு'க்கு பிறகு ?

'அச்சமுண்டு அச்சமுண்டு'க்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்.


Add new comment

Or log in with...