ஸ்மார்ட் மின்மானிகளை அறிமுகப்படுத்த திட்டம் | தினகரன்


ஸ்மார்ட் மின்மானிகளை அறிமுகப்படுத்த திட்டம்

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மின்மானிகளில் காணப்படும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், சகல வசதிகளுடன் கொண்ட புதிய ஸ்மார்ட் மின்மானிகளை அறிமுகப்படுத்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார்துறை நிறுவனமொன்று அதனை வழங்கும் விநியோகஸ்தராக முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  

இம்முறையானது வெற்றிகரமாக அமைந்தால் அதை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வீடுகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் சாதாரண மின்மானிகளில் முறைகேடுகளை ஏற்படுத்த முடியும் என்பதோடு, இதன் காரணமாக மின்மானி வாசிப்பாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும்  மின்சக்திமற்றும் வலுசக்தி அமைச்சுதெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...