வேகக் கட்டுப்பாட்டை மீறி இராணுவ வாகனம் நாயாற்றுக்குள் பாய்ந்தது | தினகரன்


வேகக் கட்டுப்பாட்டை மீறி இராணுவ வாகனம் நாயாற்றுக்குள் பாய்ந்தது

வேகக் கட்டுப்பாட்டை மீறி இராணுவ வாகனம் நாயாற்றுக்குள் பாய்ந்தது-Army Vehicle Accident-Nayaru Lagoon

முல்லைத்தீவு - நாயாறுப் பகுதியில் இராணுவத்தினர் சென்ற வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து நாயாறு களப்பினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை மீறி நாயாற்றுக்குள் பாய்ந்த இராணுவ வாகனம்-Army Vehicle Accident-Nayaru Lagoon

இன்று (21) காலை கொக்கிளாய் - முல்லைத்தீவு வீதியில் பயணித்த இராணுவ வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் சிக்கி காயமடைந்த இராணுவத்தினர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை மீறி நாயாற்றுக்குள் பாய்ந்த இராணுவ வாகனம்-Army Vehicle Accident-Nayaru Lagoon

குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிடுவதற்கு எவரையும் இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(விஜயரத்தினம் சரவணன்)


Add new comment

Or log in with...