நுவரெலியாவில் இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு | தினகரன்


நுவரெலியாவில் இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

நுவரெலியா, நேஸ்வி தோட்டப் பகுதியில் பிறந்து ஒரு நாளேயான இரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  

இது தொடர்பாக நேற்று (18) காலை 09.05 மணியளவில் 119 அவர தொலைபேசி இலக்கம் மூலமாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிசுக்களின் சடலங்கள் தொடர்பில் நுவரெலியா பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு ஒரு சடலத்தை மீட்டுள்ளனர்.  அவ்வேளையில் அவ்விடத்தில் காணப்பட்ட பொதியொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது. அப்பொதியினுள் இருந்து மற்றுமொரு பெண் சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிசுக்களும் அடையாளம் காணப்படாமையினால் 14 நாட்களுக்கு வைத்து அதன் பின் பிரேத பரிசோதனை நடத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு இரு சடலங்களையும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...