வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலேயே நான் நீதிபதிகளுடன் பேசினேன்

நான் திருடனோ மோசடிக்காரனோ அல்ல

திருடர்களை கைது செய்யும் வாக்குறுதியை நிறைவேற்றாததாலேயே நான் நீதிபதிகளுடன் தொலைபேசியில் உரையாடினேன்.நான் திருடனோ மோசடிக்காரனோ கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பது தொடர்பிலான சர்ச்சையில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; எனக்கு பாராளுமன்றத்திலோ நீதிமன்றத்திலோ பேச இடமளிக்கப்படுவதில்லை. நான் விளக்கமறியலில் இருக்கிறேன். தெரிவு செய்த சில குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பித்துள்ளேன். முன்னாள் ஜனாதிபதிகள்,பிரதமர், அமைச்சர்கள் அவர்களின் மனைவிமார்களுடான உரையாடல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.நான் கைதான போது அதனை ஒரு ஊடகம் நேரடி ஒலிபரப்பு செய்தது. நான் திருடனோ மோசடிக்காரனோ அல்ல.எம்.பியாக எந்த திருட்டும் செய்யவில்லை. 2015 இல் திருடர்களை பிடிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் நான் நீதிபதிகளுடன் தொலைபேசியில் பேசினேன்.அவர்கள் என்னுடன் பேசினார்கள்.பிரதமர் எனது நண்பர். நான் ஒரு தடவை கைதானபோது மீட்டார்.

அநேக எம்.பிகள் திருட்டுக்காக சிறை சென்றாலும் நான் திருட்டுக்கு எதிராக பேசி சிறை சென்றேன். எனக்கு சொந்தமாக நாட்டில் எப்பகுதியிலும் ஒரு பேர்ச் காணி கூட கிடையாது. மாதிவல எம்.பி களின் உத்தியோகபூர்வ வீட்டிலேயே இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

லோரன்ஸ்  செல்வநாயகம்,  ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...