தல்கஸ்வலை புனித தெரெசா ஆலயத்தில் தவக்கால சிறப்பு நிகழ்வுகள்

தல்கஸ்வலை புனித கல்கத்தா தெரெசா ஆலயத்தில்  தவக்கால சிறப்பு நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மேற்படி  ஆலயம் பல்வேறு விதங்களில்  கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீக சேவையாற்றி வருகிறது. அதில் ஒரு அம்சமாக மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு பக்தி சபையினர், இளையோர் மற்றும் இறைமக்களுக்கான  சிறப்பு ஒரு நாள் தியானங்களை  தவக்காலம் முழுதும் நடத்த தீர்மானித்துள்ளதாக அருட்தந்தை அருள் றெக்ஸ் தெரிவித்தார். 

இதற்கிணங்க   இயேசுவில் புதுவாழ்வு,   குடும்ப வாழ்வு,  இயேசுவின் பாடுகள் சொல்லும் பாடங்கள்,  நான் பார்வை பெறவேண்டும்,  தாகமாய் இருக்கிறேன்,  அகக் காயங்களுக்கு மருந்து இயேசு  ஆகிய  தலைப்புக்களில் தியானம் இடம்பெறும்.  சிலுவைப் பாதை மற்றும் திருப்பலியோடு தியானம் நிறைவுபெறும். 

அன்னை தெரெசாவின் முதல்தர புனிதப் பண்டம்  ஆலயத்தில் இறைமக்களின் ஆராதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. (ஸ)


Add new comment

Or log in with...