மின்வேலியில் சிக்கி இரு யானைகள் பலி | தினகரன்

மின்வேலியில் சிக்கி இரு யானைகள் பலி

மினிப்பே, 05ஆம் கட்டைப் பகுதியில் ஹதகனாவ வட்டமுல்ல பிரதேசத்திலுள்ள வயல்வெளியை அண்டிய பகுதியில் இரு யானைகள் உயிரிழந்துள்ளன.

இன்று (18) அதிகாலை கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் வனஜீவராசி அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வயல் நிலத்தை சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி குறித்த யானைகள் இரண்டும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 


Add new comment

Or log in with...