மட்டக்களப்பில் வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு | தினகரன்


மட்டக்களப்பில் வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு

வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் தொனிப்பொருளில் பெண்களுக்கான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்றவீடுகள், சமூகங்கள், நாடுகள், உலகை உருவாக்க எழுவோம் எனும் செயல்திட்டத்தின் பெண்களுக்கானவன்முறைகளை தடுக்கும் வகையில் வீதியோர ஓவியங்கள், பறையடித்தல், வீதி நாடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்புமாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18)மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் நடைபெற்றது.

"வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்" தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சூர்யா பெண்கள் நிறுவனம், மூன்றாவது கண் அறிவுத்திறன் குழுவினர், வன்முறையற்ற வாழ்விக்கான ஓவிய குழுவினர், மாவட்ட பெண்கள் அமைப்புக்களின் குழுவினர், வன்முறையற்ற வாழ்வை விரும்பும் தனிநபர்கள்எனப் பலர்கலந்துகொண்டனர்.

(என்.ஹரன் - ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...