அஹுங்கல்லவில் துப்பாக்கிச்சூடு; 36 வயது நபர் பலி | தினகரன்

அஹுங்கல்லவில் துப்பாக்கிச்சூடு; 36 வயது நபர் பலி

அஹுங்கல்லவில் துப்பாக்கிச்சூடு; 36 வயது நபர் பலி-Shooting at Ahungalla-36 Yr Old Killed

அஹுங்கல்ல, வெலிவத்துகொடை பிதேசத்தில்‌ இன்று (17) காலை 6.50 மணியளவில்‌ இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில்‌ மோட்டார்‌ சைக்கிளில்‌ வருகை தந்த அடையாளம்‌ தெரியாத சந்தேகநபர்கள்‌ இருவரினால்‌ குறித்த நபர் மீது துப்பாக்கிப்‌ பிரயோகம்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச்‌ சென்றுள்ளனர்‌.

துப்பாக்கிப்‌ பிரயோகத்தில்‌ காயமடைந்தவர்‌ பலப்பிட்டிய வைத்தியசாலையில்‌ அனுமதிக்கப்பட்ட பின்னர்‌ உயிர்‌ இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய வெலிவத்துகொடை, பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, துப்பாக்கி பிரயோகம்‌ நடாத்தியதற்கான காரணம்‌ மற்றும்‌ சந்தேகநபர்கள்‌ சம்பந்தமாக இதுரையில்‌ எவ்வித தகவலும்‌ தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிசார்‌ மேற்கொண்டு வருகின்றனர்‌.


Add new comment

Or log in with...