பயங்கரவாதத்தினை ஒழிக்க முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

பயங்கரவாதத்தினை ஒழிக்க கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பங்களிப்பு செய்தது போல எதிர் காலத்திலும் முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை இராணுவத்தின் கெமுனு 4 படைப் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி லெப்டிணன் லசந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட இலங்கை இராணுவத்தின் கெமுனு 4 படைப் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி லெப்டிணல் லசந்த ஜெயசிங்க மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு இன்று (17) விஜயம் செய்து பள்ளிவாசல் நிருவாகத்தினரை சந்தித்தார்.

கட்டளை அதிகாரியை பள்ளிவாயல் நிருவாகத்தினர் வரவேற்றதுடன் பள்ளிவாயலையும் சுற்றி காண்பித்தனர்.

இதன் போது பள்ளிவாயலின் தலைவர் எம்.எச்.எம்.சியாம் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த கட்டளை அதிகாரி லெப்டிணன் லசந்த ஜெயசிங்க பயங்கரவாதத்தினை ஒழிக்க கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பங்களிப்பு செய்தது போல எதிர் காலத்திலும் முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இராணுவத்தினர், பாதுகாப்பு படையினர் சாதி சமயம் இனம் மொழி பார்த்து தமது கடமைகளை செய்வதில்லை. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூக சமயத்தினருக்குமே சேவையாற்றுகின்றோம்.

இன்று நமக்கிருக்கின்ற பெரிய சவால் போதைவஸ்த்தை ஒழிப்பதாகும். போதைவஸ்த்தை ஒழித்து இந்த நாட்டை நாம் கட்டிக்காக்க வேண்டும். இளம் சந்ததியினரையும் போதைவஸ்த்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

எந்த நேரமும் தொடர்பு கொண்டு நீங்கள் என்னோடு பேச முடியும். உங்களது ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும். தேசிய பாதுகாப்பை உறுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நகர் முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.கலீல், பள்ளிவாலயல் செயலாளர் ஏ.எச்.அமீன் நழீமி, பள்ளிவாயலின் பொருளாளர் எம்.சுகைர் உட்பட பள்ளிவாயல் நிருவாகிககள், சலாமா கழக உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்;.

(எம்.எஸ். நூர்டீன், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...