200 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம் | தினகரன்

200 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்

200 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்-Three Wheel Accident-Fell Down From 200 Feet

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

200 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்-Three Wheel Accident-Fell Down From 200 Feet

தலவாக்கலை ட்ரூப் தோட்ட பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று (17) இரவு தலவாக்கலை, ட்ரூப் பிரதான வீதியில் ட்ரூப் பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

200 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்-Three Wheel Accident-Fell Down From 200 Feet

எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

200 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்-Three Wheel Accident-Fell Down From 200 Feet

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கிரிஷாந்தன்)

Add new comment

Or log in with...