திருகோணமலை நீதவான் ஹம்ஸா அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம் | தினகரன்


திருகோணமலை நீதவான் ஹம்ஸா அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம்

திருகோணமலை நீதவான் ஹம்ஸா அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம்-Trincomalee Magistrate MHM Hamza Transferred to Akkaraipattu

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் பிரதம நீதவானாக கடமையாற்றிய, எம். எச். எம். ஹம்ஸா , அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (14) மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் அவருக்கான பிரியாவிடை வைபவம் நடைபெற்றது.

திருகோணமலை நீதவான் ஹம்ஸா அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம்-Trincomalee Magistrate MHM Hamza Transferred to Akkaraipattu

திருகோணமலை நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பிரியாவிடை நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் இளஞ்செழியன், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். கண்ணன், திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். பீ. முஹைதீன், மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க  ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அவரது சேவையை பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம், முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - அப்துல் ஹலீம்)


Add new comment

Or log in with...