112 வயது ஜப்பானியர் புதிய கின்னஸ் சாதனை

உலகில் உயிர்வாழும் வயதான ஆண் என ஜப்பான் நாட்டின் 112 வயது சிடெட்சு வடனாபே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

1907ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் திகதி டோக்கியோவின் வடக்காக நிகாடேவில் பிறந்த வடனாபேவுக்கு அவர் தங்கி இருக்கும் பராமரிப்பு இல்லத்தில் வைத்து கடந்த புதன்கிழமை கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.

முன்னர் இந்த சாதனையை வைத்திருந்த மற்றொரு ஜப்பானியரான மசாசோ நொனாகா தனது 112 வயது மற்றும் 266 நாட்களில் கடந்த மாதம் உயிரிழந்தார்.

திருமணம் முடித்து ஐந்து குழந்தைகளின் தந்தையான வடனாபே, “கோபப்படாமல் தொடர்ந்து புன்னகை முகத்துடன் இருப்பதே நீண்ட காலம் உயிர்வாழ்வதன் இரகசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் வயதான மனிதரும் ஜப்பானிலேயே வாழ்கிறார். 117 வயதான கனே டனாகா என்ற மூதாட்டியே அந்த சாதனைக்கு சொந்தம் கொண்டாடுகிறார்.

உலகில் அதிக ஆயுள் காலத்தை கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது.


Add new comment

Or log in with...