மூன்று விருதுகளை வென்றது MillenniumIT ESP | தினகரன்


மூன்று விருதுகளை வென்றது MillenniumIT ESP

இலங்கையின் முன்னணி கட்டமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் கட்டமைப்பு வழங்குநரான MillenniumIT ESP அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் சம்மேளன (SLASSCOM) புத்தாக்க விருதுகள் 2019நிகழ்வில், தொழில்நுட்ப தீர்வுகள் சமர்பிப்பில் மூன்று விருதுகளை வென்றிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. 

புத்தாக்க கட்டமைப்புசூழலை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் உள்நாட்டு புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் வியாபார சிறப்புகளை கெளரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார செயன்முறை முகாமைத்துவ (BPM) துறையிலிருந்து சுமார் 300க்கும் அதிகமான நிபுணர்களை ஒன்றிணைத்திருந்த முன்னணி தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் வழங்கும் நிகழ்வாக அமைந்திருந்தது.  

ஏழு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றில், சிறந்த தயாரிப்பு புத்தாக்கம், சிறந்த புரட்சியாளர் விருது, சிறந்த வாடிக்கையாளர் விநியோக புத்தாக்கம், உள்ளக செயன்முறையில் சிறந்த புத்தாக்கம், சிறந்த தொழில்நுட்பம் அல்லது கட்டமைப்பு புத்தாக்கம், சிறந்த ஆரம்ப நிலை தயாரிப்புஃசேவை மற்றும் வியாபார செயன்முறை முகாமைத்துவத்தில் சிறந்த புத்தாக்கம் ஆகியன அடங்கியிருந்தன.

உள்ளக செயன்முறையில் சிறந்த புத்தாக்கம் பிரிவில் வெற்றியாளர், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை MillenniumIT ESP பெற்றுக் கொண்டது. 

MillenniumIT ESP இன் தாழில்நுட்ப ஒன்றிணைவுகள் மற்றும் புத்தாக்கப் பிரிவின் தலைமை அதிகாரி ரஹல் ஜயவர்தன தமது ‘In Search of Sri Lankan Unicorns’ எனும் தலைப்பில் வெளியிட்டிருந்த கருத்துரையில், இலங்கையின் ஆரம்பநிலை நிறுவனங்களின் கட்டமைப்பில் நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பங்களிப்பு பற்றி தெரிவித்திருந்ததுடன், அடுத்த சில வருடங்களினுள் இலங்கையின் சொந்த பிரம்மாண்ட ஆரம்பநிலை நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்கு இதன் முக்கியத்தும் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். விருதுகள் வழங்கும் பிரிவுகளில் வெற்றியீட்டியவர்களுக்கான விருதுகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.


Add new comment

Or log in with...