ஐஸ் என சந்தேகிக்கப்படும் 3 கி.கி. பொதி மீனவர்களால் கடலில் மீட்பு | தினகரன்


ஐஸ் என சந்தேகிக்கப்படும் 3 கி.கி. பொதி மீனவர்களால் கடலில் மீட்பு

ஐஸ் என சந்தேகிக்கப்படும் 3 கி.கி. பொதி மீனவர்களால் கடலில் மீட்பு-Fisherman Found ICE Drug Parcel in Sea

திருகோணமலையிலிருந்து சுமார் 180 கடல்மைல் தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் மிதந்து வந்த ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (14) காலை 6.20 மணியளவில் தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தை நோக்கி மீன்பிடி படகில் வந்த மீனவர்கள், 3 பொதிகள் மிதந்து வருவதனைக் கண்டுள்ளனர்.

குறித்த பொதிகள் தொடர்பில் சந்தேகம் கொண்ட அவர்கள், பொதிகளை மீட்டு மீன்பிடித்துறைமுக கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பொதிகளை கடற்படையினர், தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதையடுத்து,  அதில் ஐஸ் என சந்தேகிக்கப்படும் 3 கிலோ 172 கிராம் (3.172 கி.கி.) போதைப்பொருள் இருப்பதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...