முத்துவெல்ல, அளுத்மாவத்தை வீதிகளில் ஒருவழிப் போக்குவரத்து

முத்துவெல்ல, அளுத்மாவத்தை வீதிகளில் ஒருவழிப் போக்குவரத்து-Aluth-Mawatha-Mutwal-Roads-One-Way

நாளை முதல் நடைமுறை

தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கொழும்பு வடக்குப் பிரிவின் முத்துவெல்ல மாவத்தை மற்றும் அளுத்மாவத்தை வீதிகளை ஒருவழி போக்குவரத்தாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு போக்குவரத்து பொலிஸாரும் கொழும்பு மாநகர சபை பிரிவினரும் இணைந்து து இந்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.

இப்போக்குவரத்து திட்டம் நாளை (15) காலை 8.00 மணியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய,
கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள்
இப்பகே வத்த சந்தி, புனித அன்ரூ பிரதேசம், முத்துவெல்ல மாவத்தை, மோதறை வீதி, ராசமுனகந்த சந்தி, மட்டக்குளி மத்திய வீதி, புதிய நீர்கொழும்பு வீதி, கதிரான பாலம் மூலமாக எலகந்த வத்தை நோக்கி பயணிக்க முடியும்.

கொழும்பினுள் நுழையும் வாகனங்கள்
கதிரான பாலம், மட்டக்குளி மத்திய வீதி, ராசமுனகந்த சந்தி, அலுத்மாவத்தை, இப்பகே வத்தை, ஹெட்டியாவத்தை ஊடாக கொழும்பிற்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...