மின்சாரத்தை துண்டிக்க திட்டமில்லை; சிக்கனமாக பயன்படுத்தவும் | தினகரன்


மின்சாரத்தை துண்டிக்க திட்டமில்லை; சிக்கனமாக பயன்படுத்தவும்

நாட்டில் வரட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும், மின்விநியோகத்தை துண்டிக்கும் எண்ணம் இல்லையென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள அவர், மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக திட்டங்கள் வகுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

கடந்த ஆட்சியின்போது மின்சார உற்பத்தி தொடர்பாக எதுவித திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்பதோடு, மாற்று வலுசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டில் இதற்கான புதிய திட்டம் பூர்த்தி அடையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...