நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க CID இனால் கைது | தினகரன்


நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க CID இனால் கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

UL208 எனும் ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 4.37 மணியளவில் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக் (MiG) விமான கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, அவருக்கு பிடியாணை உத்தரவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...