யாழில் 92 கி.கி கேரள கஞ்சா மீட்பு | தினகரன்


யாழில் 92 கி.கி கேரள கஞ்சா மீட்பு

யாழ். மானிப்பாய் – மருதனார்மடம் வீதியில் உடுவில் பகுதியில் 92 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன், டிப்பர் வாகனம் ஒன்றை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த டிப்பர் வாகன சாரதி தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (12) அதிகாலைமானிப்பாயிலிருந்து வந்த டிப்பர் வாகனத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்வழிமறித்து  சோதனை மேற்கொண்டபோது,  டிப்பர் வாகனத்திற்குள் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சா மற்றும் டிப்பர் வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் மீட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தப்பி ஓடிய வாகன சாரதி தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்– சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...