அதிக நீரை அருந்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என்பதோடு, எப்பொழுதும் தங்கள் கைவசம் நீரை சிறியளவிலேனும் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பொதுமக்கள் வெய்யிலில் உலாவுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் வெய்யிலில் உடற்பயிற்சி செய்துகொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, வெய்யிலின்போது எப்பொழுதும் தொப்பிகளை அணிந்திருக்க வேண்டும். மேலும் உஷ்ணத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக சரியான ஆடையை அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த வெப்பநிலை மற்றும் உடலில் உஷ்ணம் அதிகரித்தல் காரணமாக பக்கவாதம் போன்றவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடும். இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கையை பொதுமக்கள் எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலில் உஷ்ணம் அதிகரித்தல், தலைவலி, உடற்சோர்வு, மயக்கம், தசைகள் பலவீனமடைதல், தசைப்பிடிப்பு, சுவாசிக்க சிரமப்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் பக்கவாதத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...