நீதி மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் - நிர்பயாவின் தாய்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்து வருகிறோம் என நிர்பயா தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

டில்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் டில்லி விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

டில்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது. இதற்கிடையே நிர்பயாவின் பெற்றோர் டில்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண விறாந்து பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, 4 குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன் வழக்கை ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக நிர்பயாவின் பெற்றோர் நேற்று நீதிமன்றத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறேம். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள் என கண்ணீர் மல்க கூறினார்.

அதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:

நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் தற்போது நம்பிக்கை மற்றும் உறுதியை இழந்து நிற்கிறேன். என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், இந்த குற்றவாளிகள் தந்திரங்களை பயன்படுத்தி தண்டனையை தாமதப்படுத்தி வருகின்றனர்.

தண்டனையை தாமதிக்க முயல்கின்றனர் என்பதை நீதிமன்றம் ஏன் புரித்துகொள்ளவில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழந்து வருகிறோம் என தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...