லூர்து நகரில் அன்னை மரியாள் காட்சி தந்த திருவிழா இன்று

இவ்வாரம் நாம் அன்னை மரியாள் லூர்து நகரில் காட்சியளித்த விழாவினை கொண்டாடுகின்றோம்.

படிப்பறிவில்லாத ஏழையாகிய பெர்னதெத் என்பவருக்கு காட்சி தந்து தம்மை "அமல உற்பவம் நாமே" என்று அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அத் தலம் விரைவிலேயே புனிதத் திருத்தலம் என புகழ்பெற்றது.

பல ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே மன மாற்றம் பெற்றுள்ளனர். அவ்விடத்தில் நிகழும் அற்புதங்கள் மக்கள் இனத்தாரின் வேறுபாடுகளை காண்பதில்லை.

 ஏன் கடவுளே இல்லை என மறுக்கிறவர்கள் கூட இங்கே வந்து சுகம் பெற்று ஆண்டவரை போற்றியவர்களாய் மாறியுள்ளனர்.

பிரெஞ்சு மக்கள் புரட்சியின் பின்னர் திருச்சபை மிகச் சோர்வான ஒரு நிலையை அடைந்திருந்தது. ஆலயங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன.அரசாங்கமும் ஒரு மதச் சார்பற்றது என்று தன்னை எடுத்துரைத்து திருச்சபையை வெளிப்படையாகவே ஓரங்கட்டி இருந்தது.ஆயர்களும் குழுக்களும் கன்னியாஸ்திரிகளும் வெறுப்புடனும் ஏளனத்துடனும் பார்க்கப்பட்டனர்.இதனால்தான் பெர்னதெத் தான் அன்னை மரியாளைக கண்டேன் என்று சொன்னவுடன் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. திருச்சபையும் ஒரு விசேட அவதானத்துடன் இவ்விடயத்தை அணுகியது.

ஆனால் வெகு சீக்கிரமே இதனை திருச்சபை அங்கீகரித்ததுடன் மக்கள் வெள்ளமும் லூர்து பதியில் பெருகத் தொடங்கியது.

 பல ஆயிரக்கணக்கான குணப்படுத்தல்

கள் அறிவிக்கப்பட்டன.புரட்டஸ்தாந்து சபைகளைக் கூட சற்றே அமர்ந்து என்னதான் நடக்கிறது லூர்து நகரில் என்று எண்ண வைத்தது.

இன்று அனேகமாக உலகில் உள்ள எல்லா கத்தோலிக்க ஆலயங்களிலும் லூர்து கெபி ஒன்று இருப்பது கட்டாயமாகவே கருதப்படுகின்றது.இவ்வாறு அன்னை மரியின் வேறு எந்த ஒரு காட்சியையும் விட லூர்து நகர் காட்சி பிரபலமாகியுள்ளது. உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான லூர்து அன்னை ஆலயங்கள் காணக்கிடைக்கின்றன.

பாப்பரசரும் கூட அன்னை மரியாள் காட்சி தந்த பெப்ரவரி 11ஆம் திகதியை உலக நோயாளர் தினமாக அறிவித்துள்ளார். இலங்கையில் தேவத்தையில் உள்ள ஆலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமே.

இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்ற இடத்தில் உள்ள லூர்து அன்னை ஆலயம் புகழ்பெற்று திகழ்கின்றது. புதுச்சேரி ஒருகாலத்தில் பிரான்ஸ் தேசத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அப்போது அங்கிருந்த ஒரு குருவானவர் புனித பெர்னதெத்தின் நெருங்கிய உறவினர்.

தம் ஒன்றுவிட்ட சகோதரருக்கு மாதா காட்சி கொடுத்தார் எனக் கேள்வியுற்ற அவர் பிரான்ஸ் விரைந்தார். அங்கே உருவாக்கப்பட்ட சொரூபத்தின் பிரதி ஒன்றைக் கொண்டு வந்தார்.

இன்று பிரான்ஸ்  தேசத்திற்கு வெளியே உருவாகிய முதல் லூர்து அன்னைஆலயமாக இது திகழ்கின்றது.

-சகோ. டிவோட்டர்


Add new comment

Or log in with...