வட இந்திய மற்றும் தென்னிந்திய சுவைகளுடன் துவாரகா உணவகம் கல்கிஸ்சையில் | தினகரன்


வட இந்திய மற்றும் தென்னிந்திய சுவைகளுடன் துவாரகா உணவகம் கல்கிஸ்சையில்

வட இந்திய மற்றும் தென்னிந்திய சுவைகள் நிறைந்த துவாரகா உணவகத்தின் இரண்டாவது கிளை அண்மையில் இல 10, பழைய குவாரி வீதி, கல்கிஸ்சை எனும் முகவரியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

100விருந்தினர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தும் இடவசதிகளுடன் குளிரூட்டப்பட்ட சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்கிஸ்சை துவாரகா உணவகத்தில் வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளை சமைப்பதில் கைதேர்ந்த சமையற் கலை வல்லுனர்கள் பலர் வட இந்தியாவிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளை அதன் அசல் சுவையுடன் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் நோக்கத்தில் இவ்வாறு இந்திய சமையற்கலை வல்லுனர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதோடு, காலை 10மணி தொடக்கம் இரவு 10மணி வரை இந்த உணவகம் திறந்திருக்கும். 

பிரத்தியேகமாக குழுவாக உணவருந்தும் வகையில் 25விருந்தினர்களுக்கான வசதிகளை கொண்ட இரண்டு விஷேட அறைகளையும் கொண்டுள்ள துவாரகா உணவகத்தில் உங்களுக்கு பல்வேறு சுவைகளிலான நாண் ரொட்டிகள், பராட்டா, மசாலா, செட்டிநாடு, பன்னீர், தோசை, இடியப்பம், சோறு, நூடில்ஸ், ப்ரைட் ரைஸ், கொத்து ரொட்டி, வடை, ஆப், புரியாணி, சோர்ட் ஈட்ஸ், ஸ்டார்ட்டர்ஸ், சேலட், ரைட்டா, பழச்சாறுகள், லெசீ, குளிர் பானங்கள், பால், தேநீர் மற்றும் கோப்பி பானம் உள்ளிட்ட ஏராளமான சுவைமிகு உணவு வகைகளை நியாயமான விலையில் பெறமுடியும்.  

UBER மற்றும் PICK ME ஊடாகவும் இங்கிருந்து நீங்கள் விரும்பும் உணவு வகைகளை தமது வீடுகளுக்கே தருவித்துக்கொள்ள முடிவதோடு, துவாரகா உணவகத்துக்குச் சொந்தமான விநியோக வலையமைப்பொன்றும் இயங்கி வருகிறது. கல்கிஸ்ச துவாரகா உணவகத்துக்கு வருகின்ற வாடிக்கையாளர்களின் வசதி கருதி நல்ல இடவசதிகளைக் கொண்ட வாகனத் தரிப்பிடமொன்றும் உள்ளது.


Add new comment

Or log in with...