ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த நடிகைகள் | தினகரன்

ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த நடிகைகள்

ரவி வர்மாவின் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த நடிகைகள்-Recreating Ravi-Varman-Art

புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட் ராம், 2020 ஆம் ஆண்டிற்கு ஒரு தனித்துவமான  கலெண்டரை NAAM அறக்கட்டளைக்காக வடிவமைத்துள்ளார். புகழ் பெற்ற ராஜா ரவி  வர்மாவின் ஓவியங்களை தென்னிந்திய நடிகைகள் மற்றும் நடனக் கலைஞர்கள்  பிரதிபலிக்கும்படியான அட்டகாசமான படங்களை அவர் எடுத்துள்ளார்.

நடிகை  சுஹாசினியின் நாம் அறக்கட்டளை தனது 10-ம் ஆண்டை கொண்டாடுகிறது. ஆகையால்,  “இந்திய பெண்களை” கொண்டாடும் வகையில் ரவி வர்மனின் ஓவியங்களுக்கு உயிர்  கொடுக்கச் செய்திருக்கிறார்கள்.

11 பெண்களின் 12 படங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த கலண்டர் கடந்த 3-ம்  திகதி சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி ஒற்றைப்  பெண்களின் வாழ்க்கை நிலையை சமூகத்தில் மேம்படுத்துவதற்காக  பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தப் படங்களில் குஷ்பு, ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா  ராஜேஷ், சமந்தா அக்கினேனி, நதியா, லிசி, லட்சுமி மஞ்சு நடனக் கலைஞர்களான  ஷோபனா, பிரியதர்ஷினி கோவிந்த் மற்றும் சாமுண்டேஸ்வரி ஆகிய 11 பேர் இடம்  பெற்றுள்ளனர்.

ரவி வர்மாவின் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த நடிகைகள்-Recreating Ravi-Varman-Art

ரவி வர்மாவின் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த நடிகைகள்-Recreating Ravi-Varman-Art

ரவி வர்மாவின் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த நடிகைகள்-Recreating Ravi-Varman-Art

ரவி வர்மாவின் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த நடிகைகள்-Recreating Ravi-Varman-Art

Add new comment

Or log in with...