கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி | தினகரன்


கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி-CoPE Committee Chairman Sunil Handunnetti

அரசாங்க பொறுப்பு முயற்சிகள்‌  (CoPE) தொடர்பான குழுவின்‌ தகைவராக பாராளுமன்ற உறுப்பினர்‌ சுனில்‌ ஹந்துன்நெத்தி இன்று (07) மீண்டும்‌ ஏகமனதாக தெரிவுசெய்யட்டார்‌.

பாராளுமன்ற உறுப்பினர்‌ சுனில்‌ ஹந்துன்நெத்தியின்‌ பெயரை பாராளுமன்ற உறுப்பினர்‌ அஜித்‌ பீ பெரேரா முன்மொழிந்ததுடன்‌, பாராளுமன்ற உறுப்பினர்‌ அசோக்‌ அபேசிங்க வழிமொழிந்தார்‌.

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி-CoPE Committee Chairman Sunil Handunnetti

பாராளுமன்ற கூட்டத்தொடர்‌ கடந்த 2019ஆம்‌ ஆண்டி டிசம்பர்‌ 02ஆம்‌ திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட முன்னரும்‌ இவர்‌ அரசாங்க பொறுப்பு முயற்சிகள்‌ பற்றிய குழுவின்‌ தலைவராக செயற்பட்டிருந்தார்.

பாராளுமன்றத்தில்‌ இன்று (07) கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள்‌ பற்றிய குழுவின்‌ கூட்டத்தில்‌ அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாபா, சுசில்‌ பிரேமஜயந்த மற்றும்‌ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்‌ பீ பெரேரா, அசோக்‌ அபேசிங்க, டி.வி. சாணக மற்றும்‌ கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர்‌ கலந்துகொண்மருந்தனர்‌.


Add new comment

Or log in with...