இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் கஞ்சிப்பானை இம்ரான் | தினகரன்


இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் கஞ்சிப்பானை இம்ரான்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்ரான கஞ்சிப்பானை இம்ரான் என அழைக்கப்படும் முஹமட் நஜீம் முஹமட் இம்ரான் இன்று (19) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவருக்கு,  தொலைபேசி வாயிலாக கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகநபரிடம் குரல் மாதிரியொன்றை பெற்றுக்கொள்வதற்காக அவர் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு, , கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டிருந்தார்.  


Add new comment

Or log in with...