கோப், கோபா குழு வெள்ளி கூடுகிறது | தினகரன்


கோப், கோபா குழு வெள்ளி கூடுகிறது

கோப், கோபா குழு வெள்ளி கூடுகிறது-CoPE-CoPA Committee on Friday

பொது கணக்குகளுக்கான குழு (CoPE) மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு (CoPA) ஆகியன எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

8ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு தொடர்பாக இந்த குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கரு ஜயசூர்ய இன்று (05) அறிவித்தார்.

அதற்கமைய, கோப் குழு எதர்வரும் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 2.00 மணிக்கும், கோபா குழு பிற்பகல் 2.30 மணிக்கும் கூடவுள்ளது.

ஜனவரி 24ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் இவ்விரு குழுக்களின் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபா குழுவில், அமைச்சர்கள் பவித்ராதேவி வன்னியாரச்சி, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, துமிந்த திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, லசந்த அழகியவன்ன, ஷெஹான் சேமசிங்க, சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பாலித ரங்கே பண்டார, நிரோஷன் பெரேரா, செய்யத் அல் ஷாஹிர் மௌலானா, புத்திக பத்திரண, எஸ். ஶ்ரீதரன், நலிந்த ஜயதிஸ்ஸ, விஜேபால ஹெட்டியாரச்சி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

கோப் குழுவில், அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாபா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அலுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ஜயந்த சமரவீர மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் எம்.பி.க்களான ரஊப் ஹக்கீம், விஜேதாச ராஜபக்ஷ, ஹர்ஷ டி சில்வா, அஜித் பி பெரேரா, ஶ்ரீயானி விஜேவிக்ரம, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, சுனில் ஹந்துன்னெத்தி, மாவை சேனாதிராஜா, டி.வி. சானக ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.


Add new comment

Or log in with...