புத்தளத்தில் மரம் நடுகை | தினகரன்

புத்தளத்தில் மரம் நடுகை

இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் குவைத் வைத்தியசாலை வீதியில் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளன.

புத்தளம் நகர சபை, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை, தேச விவகார பகுதியின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பிரிவான ரம்ய லங்கா அமைப்பும் என்பன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

"வளரும் நகரம் படரும் பசுமை" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உதயமான இந்த மர நடுகை நிகழ்வில் மருத, வேம்பு, எஹல போன்ற 30 நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் நகராதிபதி கே.ஏ. பாயிஸ், புத்தளம் பிரதேச செயலாளர் சஞ்சீவனி ஹேரத், புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியளாளர் அருள் தாஸன், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.உஸைர் (இஸ்லாஹி) உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள், ரம்ய லங்கா அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 புத்தளம் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...