கோப் குழு கூட்டங்களில் ஊடகங்களுக்கு அனுமதி | தினகரன்


கோப் குழு கூட்டங்களில் ஊடகங்களுக்கு அனுமதி

இன்று முதல் நடைமுறை 

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) கூட்டங்களுக்கு இன்று (09) முதல் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். 

அத்தோடு அரச பொறுப்பு முயற்சிகள் குழு அறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப முறையும் இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுவதா கவும் அவர் அறிவித்தார்.

 தினப்பணிகளின் ஆரம்பத்தில் இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் சகல எம்.பிகளுக்கும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இதே வேளை அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கூட்டத்திற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆசூ மாரசிங்க எம்.பி, இதனை ஊடகங்களுக்கு திறந்து விடுவதை வரவேற்கிறோம். இங்கு நடைபெறும் விடயங்களை ஊடகங்களினூாக அறிய வாய்ப்பு ஏற்படும்.இதே போன்று ஏனைய துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் ஊடகங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும். இங்கு என்ன நடைபெறுகிறது என மக்கள் அறிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், இது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.கட்டம் கட்டமாக ஏனைய குழுக்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்,   மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...