சாரதி பயிற்சியின் போது 26 வயது பெண் பலி | தினகரன்


சாரதி பயிற்சியின் போது 26 வயது பெண் பலி

சாரதி பயிற்சியின் போது 26 வயது பெண் பலி-Recenly Married Women Dead While Learning Three Wheeler

- திருமணம் முடித்து 5 நாட்களின் பின் பலி
- பயிற்சியாளர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்

இளம் பெண் ஒருவர் முச்சக்கர வண்டி செலுத்தும் பயிற்சியின்போது, மற்றுமொரு வாகனத்துடன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் பிபிலை, ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த உமேஷா சச்சிந்தனி எனும் 26 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (04) காலை 11.00 மணியளவில், பிபிலை, மஹியங்கணை வீதியில் முச்சக்கர வண்டி பயிற்சியில்  ஈடுபட்டிருந்தபோது, ஹேபொல பிரதேசத்தில் வைத்து, முன்னால் வந்த கார் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பிபிலவிலுள்ள சாரதி பயிற்சி நிலையத்தில் அவர் பயிற்சி பெற்றுள்ளதோடு, இதன்போது காரின் பின்புறத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படும் பயிற்சியாளர், பலத்த காயங்களுடன் பிபிலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் மரணமடைந்த யுவதி பிபிலவிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதோடு, கடந்த வியாழக்கிழமை (30) திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிபிலை பொலிஸ் பரிசோதகர் ஆரியபந்து வெதகெதரவின் அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...