2nd Test; SLvZIM: இலங்கைக்கு 361 ஓட்ட வெற்றி இலக்கு

2nd Test; SLvZIM: இலங்கைக்கு 361 ஓட்ட வெற்றி இலக்கு-2nd Test-SLvZIM-Target 361

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 361 ஓட்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 7 விக்கெட் இழந்து 247 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி 406 ஓட்டங்களை பெற்றது. சீன் வில்லியம்ஸ் ஆகக் கூடுதலாக 107 ஓட்டங்களை பெற்றார். லசித் எம்புல் தெனிய 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. ஆகக் கூடுதலாக அஞ்சலோ மெத்திவ்ஸ் 64 ஓட்டங்களைப் பெற்றார். சிறப்பாக பந்து வீசிய சிகந்தர் ராசா 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து 113 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த சிம்பாப்வே அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பிரண்டன் டெய்லர் 67 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். விஷ்வ பெனாண்டோ மற்றம் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்று (31) போட்டியின் இறுதி நாளாகும் என்பதோடு, இரு போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.

முதல் போட்டியில் இலங்கை அணி, வெற்றி இலக்கான 14 ஓட்டங்களை கடந்து 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ஆவது இன்னிங்ஸ்
சிம்பாப்வே 406/10 (115.3)

சீன் வில்லியம்ஸ் 107 (137)
சிகந்தர் ராசா 72 (99)
பிரண்டன் டெய்லர் 62 (62)

லசித் எம்புல்தெனிய 4/182 (42.3)
தனஞ்சய டி சில்வா 3/71 (17.0)
சுரங்க லக்மால் 2/37 (22.0)

இலங்கை 293/10 (119.5)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 64 (158)
ஓஷத பெனாண்டோ 44 (119)
திமுத் கருணாரத்ன 44 (120)
தனஞ்சய டி சில்வா 42 (64)

சிகந்தர் ராசா 7/113 (43.0)

2ஆவது இன்னிங்ஸ்
சிம்பாப்வே 247/7d (75.0)
சீன் வில்லியம்ஸ் 53 (77)
பிரண்டன் டெய்லர் 67 (75)

விஷ்வ பெனாண்டோ 2/43 (20.0)
லசித் எம்புல்தெனிய 2/81 (20.0)

இலங்கை 30/1 (15.0)
திமுத் கருணாரத்ன 12 (38)
ஓஷத பெனாண்டோ 17 (47)*


Add new comment

Or log in with...