கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு திங்கள் பூட்டு | தினகரன்


கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு திங்கள் பூட்டு

சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை  காரணமாக ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளை எதிர்வரும் 03ஆம் திகதி மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுதந்திர சதுக்கத்தை அண்டியுள்ள தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, யசோதரா வித்தியாலயம், மியூசியஸ் கல்லூரி, புனித பிரிட்ஜற்ஸ் கல்லூரி, கொழும்பு மகளிர் கல்லூரி, கொழும்பு சர்வதேச பாடசாலை, விர்ச்சலி சர்வதேச பாடசாலை, மஹாநாம கல்லூரி, பொல்வத்தை புனித மைக்கல் ஆண்கள் கல்லூரி, பொல்வத்தை புனித மேரி மகளிர் பாடசாலை மற்றும் அதன் கனிஷ்ட பிரிவு, மிஹிந்து மகா வித்தியாலயம், அல் ஹிதாயா வித்தியாலயம்,  கொழும்பு அசோக்கா கல்லூரி ஆகிய 15 பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளது. 

இவ்வாறு விடுபடுகின்ற பாடசாலை தினத்தை மற்றுமொரு தினத்தில் நடத்துமாறு குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 


Add new comment

Or log in with...