உணவு ஒவ்வாமையால் 41 மாணவர்கள் திடீர் சுகவீனம்

உணவு ஒவ்வாமையினால் சுகவீனமுற்ற 41 மாணவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை கலுகல  சிங்கள மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு திடீர் சுகவீனமுற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை(28) இடம்பெற்ற பாடசாலை விளையாட்டுப் போட்டியின்போது  இம்மாணவர்கள் மீன் பணிஸ் உட்கொண்டதுடன், மைதானத்திலுள்ள கிணற்று நீரையும் பருகியுள்ளனர்.

இதன் பின்னர் மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம் மற்றும் வயிறு எரிச்சல் போன்றன ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (31) தரம் 05 தொடக்கம் 11 வரையில் கல்வி பயிலும் 11 மாணவிகளும் 30 மாணவர்களுமாக 41 பேர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் கினிகத்தேனை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு  பாரிய பாதிப்புகள் இல்லை எனவும் உணவு ஒவ்வாமையே நோய் ஏற்ட்டமைக்கான காரணமென்றும்  வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ்  நிருபர் -  எம். கிருஸ்ணா)


Add new comment

Or log in with...