முக கவசங்களுக்கு அதிக விலையா? 1977 இற்கு அழைக்கவும் | தினகரன்


முக கவசங்களுக்கு அதிக விலையா? 1977 இற்கு அழைக்கவும்

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு முக கவசங்களை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை நுகர்வோர் விவகார அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பொதுமக்கள் அதிகளவில் முக கவசங்களை கொள்வனவு செய்வது காரணமாக அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இதற்கமைய கூடுதல் விலைக்கு முக கவசங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் 1977 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...