அதிக கேக்குகளை உண்ணும் போட்டியில் பெண் உயிரிழப்பு | தினகரன்


அதிக கேக்குகளை உண்ணும் போட்டியில் பெண் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் அதிக கேக்குகளை உண்ணும் போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலிய தினத்தை ஒட்டி குயீன்ஸ்லாந்தின் ஹர்வி பே ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்ற 60 வயதான அந்தப் பெண்ணுக்கு திடீரென்று வலிப்புத் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் அதிக கேக்குகளை உண்பதற்காக போட்டியாளர்கள் வேகமாக அவைகளை உட்கொண்டனர். உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண் பின்னர் உயிரிழந்தார்.

அதிக கேக் துண்டுகளை வாய்க்குள் இட்ட அந்தப் பின் சிரமத்தை எதிர்கொண்டதாக பார்த்த ஒருவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பியர்கள் முதல்முறை அவுஸ்திரேலியாவை அடைந்த தினமான இந்த தேசிய விடுமுறை தினத்தில் கேக் உண்ணும் போட்டி பிரபலமானதாகும்.


Add new comment

Or log in with...