மாலி இராணுவ முகாம் மீது தாக்குதல்: 20 படையினர் பலி | தினகரன்

மாலி இராணுவ முகாம் மீது தாக்குதல்: 20 படையினர் பலி

இஸ்லாமியவாத போராட்டக் குழுவின் தாக்குதலில் மாலியில் இருபது பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய செகுர் பிராந்தியத்தில் உள்ள சொகோலா இராணுவ முகாம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஆயுதப் படையினர் மற்றும் துணைப்படை பொலிஸாரே கொல்லப்பட்டுள்ளனர். அல் கொய்தா அல்லது இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புடைய குழுக்களே மாலி மற்றும் பிராந்தியத்தில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் கிழக்கு மாலியில் ஆயுதக் குழுவினால் 24 படையினர் கொல்லப்பட்டனர். ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்ற மற்றொரு தாக்குதல் ஒன்றில் 54 படையினர் பலியாகினர்.


Add new comment

Or log in with...