ஈரான் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் | தினகரன்


ஈரான் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்

ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடு பாதையை விட்டு விலகி நெடுஞ்சாலை ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளது.

தென் மேற்கு நகரான மஹ்ஷஹ்ரில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 135 பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது அதன் சக்கரங்கள் முழுமையாக தரையை தொடாமல் உரசிக்கொண்டே நிறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் விமானப் பயணிகள் இறங்கும் படங்கள் சமூகதளங்களில் பதியப்பட்டுள்ளது. விமானத்தை தாமதமாக தரையிறக்கியதால் விமானிக்கு ஓடு பாதை தவறி இருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் அரச தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...