சவூதி அரேபியா செல்ல இஸ்ரேலியருக்கு அனுமதி

இஸ்ரேலியர்கள் சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் வர்த்தக நோக்கத்திற்காக சவூதிக்கு 90 நாட்கள் வரை பயணம் மேற்கொள்வதற்கும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளை மேற்கொள்வதற்கும் இஸ்ரேலியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பயணத்திற்கு சவூதி அரேபியாவின் அனுமதி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் அரபு பிரஜைகளே அதிகம் சவூதி அரேபியாவுக்கு பயணிக்கின்றனர். எனினும் யூதர்கள் மற்றும் இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு இந்த பயணத்திற்கு இஸ்ரேல் அனுமதி அளிப்பதில்லை.


Add new comment

Or log in with...