83 பேருடன் சென்ற ஆப்கான் விமானம் விபத்து | தினகரன்


83 பேருடன் சென்ற ஆப்கான் விமானம் விபத்து

83 பேருடன் சென்ற ஆப்கான் விமானம் விபத்து-Afghan Plane Crash with 83 Onboard

ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள காபூலின் தென்மேல் பகுதியிலுள்ள, கிழக்கு கஸ்னி மாகாணத்திலுள்ள தெஹ் யாக் மாவட்டத்திலுள்ள மலைப் பாங்கான பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானின் அரியானா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737-400 விமானமொன்றே இவ்வாறு திடீரென பூமியை நோக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் இந்த விமானத்தை தாங்கள் இயக்கவில்லை என, அரசுக்கு சொந்தமான குறித்த விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது.

அதில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்களின் நிலை தொடர்பில் தகவல்கள் தெரியவில்லை என்றும் அது எங்கிருந்து புறப்பட்டது மற்றும் எங்கு செல்லவிருந்து என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது உள்ளூர் சேவை விமானம் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல 1.15 மணியளவில் காபூலின் தென்மேற்குப் பகுதியில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...